மதமும் அரசியலும்
₹50.00
Out of stock
Description
கடந்த செப்டம்பர் 5 ந்தேதி மூத்த பத்திரிக்கையாளரும், சமூக செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் பெங்களூரில் தன்னுடைய இல்லத்தின் வாசலின் முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னுடைய பத்திரிக்கைகளில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், களத்திலும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடியவர் தோழர் கௌரி லங்கேஷ். கர்நாடகாவில் லிங்காயத்து சமூகத்திடமிருந்து அரசியல் தளத்திலும் சமூக தளத்திலும் இந்துத்துவத்திற்கு எதிரான கோரிக்கைகளை முன்னிறுத்தி தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும், தங்களுக்கு தனி மத அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்றும், அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் அறிவுசார் தளத்தில் அதற்கு பல்வேறு வரலாற்று ஆதாரங்களைக் கொடுத்த பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி 2015-ல் கௌரி லங்கேஷ் போல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தோழர் கௌரி லங்கேஷ் நீதிக்கான போராட்டங்கள் ஆயுதமேந்தி நடத்தப்பட்டாலும் அவற்றை வெளிப்படையாக ஆதரித்தவர். ஈழ இனப்படுகொலையைப் பற்றி குமார் புருடிகட்டி எழுதிய ”ஓ ஈழம்” என்ற புத்தகத்தை கன்னட மொழியில் பதிப்பித்து வெளியிட்டார். மூவர் தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த போது மரண தண்டனைக்கு எதிரான குரலை கர்நாடாகவிலிருந்து வெளிப்படுத்தியவர் தோழர் கௌரி லங்கேஷ் அவர்கள். அவருடைய கட்டுரைகள் தமிழில் முதன்முதலில் நிமிர் பதிப்பக வெளியீடாக வருகிறது.
Reviews
There are no reviews yet.