நான் இந்துவல்ல! நீங்கள்?
₹10.00
Out of stock
Description
நான் இந்துவல்ல நீங்கள்…? என்கிற இந்த சிறு வெளியீட்டை ‘யாதுமாகி பதிப்பகம்’ 2002-ல் வெளியிட்டது. மதமாற்ற தடைச் சட்டம் மற்றும் உயிர்பலி தடைச்சட்டம் என தமிழக அரசு கொண்டுவந்த இரண்டு மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேள்வியாகக் கேட்கப்பட்டு அவருடைய ஆழ்ந்த பதிலை சிறு பதிப்பாக வெளியிட்டதுதான் இந்த நூல். இந்த சிறிய நூல் தமிழகத்தில் பெரிய அறிவார்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மணி பதிப்பகத்தாரால் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது. பிறகு கலப்பை பதிப்பகத்தின் தொ.பரமசிவன் அவர்களின் தொகுப்பு நூலிலும் நான் இந்துவல்ல நீங்கள்? சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை கலாச்சாரத்தை முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலின் பண்பாட்டு சீர்கேட்டை சரி செய்வதற்கும் நமது பண்பாட்டின் அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கும் காலத்தின் தேவை கருதி இந்நூலை மீள் பதிப்பாக ’நிமிர்’ பதிப்பகம் கொண்டு வருகிறது. இதற்கு அனுமதி தந்த பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் அவர்களுக்கு நிமிர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Reviews
There are no reviews yet.