அறிவாயுதம் ஏந்துவோம்
₹20.00
Out of stock
Description
முத்துக்குமாரும், முருகதாசனும் தமிழினத்தை தட்டி எழுப்பிய இருபெரும் நெருப்புகள். தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மக்களை போராட்டத்திற்கு அழைத்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி, தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு தீக்குளித்து வீரமரணம் அடைந்தார் இளைஞர் முத்துக்குமார். தமிழீழ இனப்படுகொலையில் ஐ.நா மன்றம் இழைத்துக் கொண்டிருக்கும் துரோகத்தினை அம்பலப்படுத்தி 2009 பிப்ரவரி 12ம் தேதி ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முன்பு தீக்குளித்து வீரமரணம் அடைந்தார் முருகதாசன். இருவரும் எழுதி வைத்த மரண சாசன கடிதங்கள் உலகெங்கிலும் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பியது.
முத்துக்குமாரின் கடிதம் தமிழகத்தில் பெரும் போராட்ட தீயினை உருவாக்கியது. நான் உயிராயுதம் ஏந்துகிறேன், நீங்கள் அறிவாயுதம் ஏந்துங்கள் என்றார் முத்துக்குமார். வீழ்த்தப்பட்ட வரலாற்றில் இருந்து மீண்டெழ இன்றைய இளைஞர்கள் அனைவரும் இந்த இரு கடிதங்களையும் அவசியம் படித்திட வேண்டும். அநீதிகளுக்கு எதிராக அறிவாயுதத்தினை ஏந்துவோம்.
Reviews
There are no reviews yet.